திங்கள், 13 ஜூன், 2011

தவறிய தருணங்கள்


வயது முப்பதை தாண்டிய முதிர் கன்னி நான்

எனது வீட்டில் நடக்கும் பெண் பார்க்கும்
அனுபவங்களை வைத்து அடுக்கி வைக்கலாம்
அத்தியாயங்கள் பல.

பெண் பார்க்கும் சாக்கில் வியாபாரம் பேசும் 
கொள்ளைக் கும்பல் வீட்டுக்கு வருகிறது வாரம் 
ஒன்று என்ற கணக்கில் 

வரதட்ச்சணை என்ற பெயரில் அவர்கள் வீட்டுக்கு 
வேண்டும் பொருட்களை பட்டியலிடும் கூட்டம் ஒன்று.

வியாபாரம் பேசும் முன்பே வயிறு முட்ட தின்று 
தீர்க்கும் கூட்டம் மற்றொன்று.

காதலித்தவனை கைப் பிடிக்க வேண்டுமென்றாலும்
கட்டாயம் இங்கு கட்டணம் செலுத்தப் படவேண்டும் .

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் செய்யப்படும்
உபசரிப்புகளுக்கும் சம்பிரயதங்களுக்கும் 
இயந்திரமாய் பழகி விட்டேன் இப்போது. 

வியாபாரம் என்றால் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் உண்டு.
ஆனால் இதில் கொடுப்பதற்கு மட்டுமே உரிமை உண்டு. 

சொல்லி வைத்தது போல  அத்தனை 
வியாபார பேரங்களும் நிகழ்ச்சியின் 
முடிவிலே முறிந்துதான் போகின்றது.

பேரங்கள் முறிந்து போவதில் எனக்கு சந்தோஷம்தான்
எனக்காக  நடத்தப்படும் இந்த வியாபாரத்தில் 
தங்கத்தை போல என் மதிப்பும்  கூடிக் கொண்டேதான் 
போகிறது.


4 comments:

மைந்தன் சிவா சொன்னது…

கொடுமையான விஷயம் பாஸ்..ம்ம்ம்
அப்புறம்,போலோவேர்ஸ் விடயத்தை முதலாவதாகவையுங்கள்...போலோ பண்ண இலகுவாய் இருக்கும் மற்றவர்களுக்கு...
ஒரு சின்ன அறிவுரை..அம்மட்டுமே ஹிஹி

மைந்தன் சிவா சொன்னது…

அதே போல வேர்ட் வெரிபிகேசன்'ஐயும் நீக்கி விடுங்கள்,கமென்ட் பண்ண இலகுவாய் இருக்கும் பாஸ்..

முரளி நாராயண் சொன்னது…

நீங்கள் கொடுமை என்று கூறியிருப்பது என்னுடைய கவிதையையா அல்லது கவிதையில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளையா?நிற்க.உங்களுடைய ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.உடனே செயல் படுத்திவிட்டேன்.

Nat Chander சொன்னது…

times will change bro... do not worry..
women are mentally courageous...

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...