வியாழன், 9 ஜூன், 2011

பதில் தேடி

உன்னை பார்த்த பிறகு காதலும்  கற்பனையும்
அதிகரித்துவிட்டது.
 
என் காதலை உன்னிடம் சொல்லிவிட்ட போதிலும் 
உன் பதில் மௌனம் மட்டுமே.

உன் பதிலை நான் தெரிந்து கொள்ள நான் காத்திருக்கும் 
நொடிகள் ஒவ்வொன்றும்  தீயைத்  தின்பதற்குச் சமம்.

நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என்
முகத்தில் ஏராளமான  கவலை ரேகைகள். 

காற்றைப் போல வலியைப் போல உன் காதலும்
என் கண்ணுக்குத்  தெரியவில்லை 

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்..

 

5 comments:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

முடிவுகள் அடுத்த மாதம் 23 ந் தேதி...
அது வரை காத்திருக்கவும்...

பிரணவன் சொன்னது…

பெண்களின் காதல் கண்களிலேயே தெரியும். . .முயர்ச்சி செய்யுங்கள். . .வாழ்த்துக்கள். . .

முரளி நாராயண் சொன்னது…

#முடிவுகள் அடுத்த மாதம் 23 ந் தேதி...
அது வரை காத்திருக்கவும்...#


அதெப்படி உங்களுக்கு தெரியும்

நன்றி திரு.சௌந்தர்

முரளி நாராயண் சொன்னது…

#பெண்களின் காதல் கண்களிலேயே தெரியும். . .முயர்ச்சி செய்யுங்கள். . .வாழ்த்துக்கள். . .#

அனுபவம் பேசுகிறதோ
நன்றி திரு.பிரணவன்

Nat Chander சொன்னது…

bro this is infatuation... nalla course onnu join panni munneru

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...