செவ்வாய், 14 ஜூன், 2011

தொலைந்து போனவன்


காதலை உன்னிடம் சொல்ல முடியாமல்  
என்னிடமிருந்த தைரியம் கரைந்து விட்டது
 
கவிதைகளில்  காதலை சொல்லி 
உன்னிடம்  சம்மதம் பெற்றேன் .

உன்னை சந்திப்பதற்க்காகவே  சந்தர்ப்பங்களை  
உண்டாக்கினேன்

என் உறவுகளிலே உனக்கு  மட்டுமே
முதல் இடம்  கொடுத்தேன்

உன்னை காதலித்த பிறகு நடந்த நல்ல
விஷயங்களுக்கு உன்னை மட்டுமே பொறுப்பாக்கினேன்

எப்பொழுதும்   என்னை உன்னிடமே
தேடினேன்  
இப்படி உனக்காகவே வாழ்ந்தேன் 

ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம் 
என்றதும் முகம் காட்ட மறுத்து 
ஓடி ஒளிந்து கொண்டாயே 

இப்பொழுது நான் என்னை எங்கே தேடுவேன்?

  


9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஐயோ பாவம். ஒளிந்து கொண்டவளால் தொலைந்து போனவர் ஆகி விட்டீர்களே! நம்மை இப்படி அழ அடிப்பதே அவங்களுக்கு வேலை போல.
நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைத்து, உற்சாகமாக மற்ற வேலைகளை கவனியுங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கவிதை அருமை. பாராட்டுக்கள்.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

////
ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம்
என்றதும் முகம் காட்ட மறுத்து
ஓடி ஒளிந்து கொண்டாயே
///////

இவ்வளவு அதிர்ச்சியா கொடுப்பது...

முரளி நாராயண் சொன்னது…

உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

உண்மைகாதல் என்றால் உயிர்ப்பெரும்...
காத்திருங்கள்...

முரளி நாராயண் சொன்னது…

ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம்
என்றதும் முகம் காட்ட மறுத்து
ஓடி ஒளிந்து கொண்டாயே
///////

இவ்வளவு அதிர்ச்சியா கொடுப்பது

இது அதிர்ச்சியை கொடுக்கிறதா?

நன்றி திரு.சௌந்தர்

மைந்தன் சிவா சொன்னது…

நெசமாலுமே இப்பிடி ஆகிவிட்டுதா பாஸ்??aiyo..

பிரணவன் சொன்னது…

எப்பொழுதும் என்னை உன்னிடமே
தேடினேன்
இப்படி உனக்காகவே வாழ்ந்தேன். . .காதலை தொலைப்பதும் நாம் தான், பின் நம்மை நாமே தேடுவதும் நாம் தான். . .

Ramani சொன்னது…

அருமையான படைப்பு
இப்படி இயல்பான வார்த்தைகளைக் கொண்டு
படிப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்வதுதான்
நல்ல படைப்பாகவே படுகிறது
காதலில் வென்றவர்கள் எல்லாம் சராசரி ஆகிப்போகிறார்கள்
தோற்றவர் மட்டுமே கவிஞனாகிறார்
தோற்றது மட்டுமே காவியமாகிறது
ஏனெனில் தோற்றவரெல்லாம் காதலை
கவிதைக்குள் தேட ஆரமிபித்துவிடுகிறார்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...