திங்கள், 6 ஜூன், 2011

வெற்றியும் தோல்வியும்நண்பா!..


வெற்றிக்கான உன் பயணம்
தடைபட்டுவிட்டதாக எண்ணாதே

தோல்விகளில்  முடிந்த  முயற்சியின்
பலனாக உன் மனம் சோர்வடைகிறது.     

உடல் சோர்வு பிரச்சனையில்லை நண்பா.
மனச்சோர்வு முதலுக்கே மோசம்.

நிறைவுபெறாத முயற்சிகளை உன் நினைவு
பட்டியலிலிருந்து அகற்று

நான்கு  சுவர்களுக்குள் உன்னை முடக்கி
முயற்சிகளை முடமாக்காதே  


இருட்டுக்குள் இல்லை உன் வெற்றி

வெளியில் வந்து  வெளிச்சத்தின் விரல் பிடித்து
வெற்றியைத்  தேடு

தோல்வி என்பது வெற்றிக்கான
பயணத்தில் ஏற்படும் சம்பவங்களே.ஒரு வகையில் தோல்வியும் நண்பன்தான்
அதுதான் உன்னை வெற்றிப் பாதையில் 
அழைத்துச் செல்கிறது.

தோல்வி என்ற அஸ்திவாரத்திலேயே
இங்கு வெற்றிக்கான கட்டடம் எழுப்பப்படுகிறது. 

திடீர் வெற்றியோ தொடர் வெற்றியோ
வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை.

நாணயத்தின் இரு பக்கம் போல
வெற்றியும் தோல்வியும்  

திறமையை பட்டை தீட்டிக் கொள்ளும் நேரம்தான்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான தூரம். 

தோல்வியில் தைரியத்தையும்
வெற்றியில் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்.

 வெற்றி நமதே!


 

 


7 comments:

சென்னை பித்தன் சொன்னது…

//தோல்வியில் தைரியத்தையும்
வெற்றியில் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்.//

பொன்னெழுத்துக்கள் முரளி!(நாராயண்?)

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நல்ல தன்னம்பிக்கை கவிதை..

முரளி நாராயண் சொன்னது…

தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி திரு.சௌந்தர்

முரளி நாராயண் சொன்னது…

தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி திரு.சென்னை பித்தன்

பிரணவன் சொன்னது…

உடல் சோர்வு பிரச்சனையில்லை நண்பா.
மனச்சோர்வு முதலுக்கே மோசம். வெற்றி மட்டுமே இருந்தால் வாழ்க்கையில் விருவிருப்பு இல்லாமல் போய்விடும். . .நல்ல கவிதை. . .

முரளி நாராயண் சொன்னது…

தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி திரு.பிரணவன்

Nat Chander சொன்னது…

bro idhu nallarukku
kadhalu pozhappakkedukkum

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...