திங்கள், 20 செப்டம்பர், 2010

முரண்பாடுகள்

சென்ற வாரம் ஒரு நாள் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு  சென்று இருந்தேன்.நான்  வீட்டிற்குள் நுழைந்த போது, அவர் வீட்டில் இருந்த குழந்தை அவரிடம் கதை சொல்லவா என்றது.அவரும் சரி என்றார். 'கடைசியில முயல் தோத்துப்  போச்சாம்' குழந்தையும் முயல் ஆமை கதையை சொல்லி முடித்தது.நண்பரும் 'ஒ அப்படியா' என்று முகத்தில் பொய்யான ஆச்சர்யத்தைக் காண்பித்தார்.குழந்தையை உள்ளே அனுப்பிவிட்டு வந்தவர், என்னிடம் அந்தக் கதையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.முயலும் ஆமையும் இரண்டு வெவ்வேறான குணாதியசங்களை கொண்ட உயிர் இனங்கள்.இரண்டும் சமமானவை அல்ல.அப்படி இருக்கும் போது  இரண்டுக்கும் எப்படி போட்டி?.மிகவும் முரண்பாடான ஒரு செயல் அல்லவா இது? என்று கேள்வியை எழுப்பினார். நான் அவரிடம் இது முரண்பாடான ஒரு கதையாக இருந்தாலும் ஒரு கற்பனைக் கதை தானே என்றேன்.ஆனால் நண்பரோ தன்னால் இதை ஏற்க முடியவில்லை என்றார்.எனக்கு புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது.ஆகையால்   மேலும் இதைப் பற்றி  பேச இயலாமல் நண்பரிடம் விடை பெற்று வெளியே வந்து என்னுடைய வேலைகளை எல்லாம் முடித்த பிறகு நண்பர் கூறிய அந்த முரண்பாடுகளைப் பற்றி யோசித்தேன்.

நாம் தினசரி வாழ்க்கையில் எத்தனையோ முரண்பாடான விஷயங்களை பார்க்கிறோம் ,பேசுகிறோம் ஏன் ஏற்றுக் கொள்ள கூட பழகி விட்டோம் என்பதுதான் உண்மை. 
தினமும் செய்தித்தாளை பிரித்தால் தென்படும் ஒரு செய்தி. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி என்றும்  தேர்தலுக்கு பிறகு வேறொரு  கூட்டணி என்றும் பிரித்து வைத்துக் கொண்டு பதவிகளை பங்கு போட்டுக் கொள்ளும் இன்றைய அரசியல்.இதுவும் ஒரு வகையில் முரண்பாடுதானே.

சொத்துக்கள் குடும்பத்தை விட்டு வெளியே செல்லாத வண்ணம் அல்லது இருப்பதை பல மடங்காக பெருகச் செய்வதற்கு அதே போல் சொத்துள்ள குடும்பம் என்று சம்பந்தவட்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே சொத்துகளுக்க்காகவே செய்து வைக்கபடும் திருமணங்கள் இன்று ஏராளம்.இதுவும் முரண்பாடுதானே.

கல்லூரியில் படித்து முடித்து விட்டு வருபவனுக்கு அதற்கேற்ற வேலை கிடைப்பதில்லை.பொருளாதாரச் சூழ்நிலை அவனை துரத்த,படிப்புக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு பணியில் சேருகிறான்.அவனுடைய .இதுவும் முரண்பாடுதானே.

இன்றைய நவநாகரிக உலகில் முறையற்ற உறவுகள் பெருவிட்டன. இதை மறைக்க கொலைகளும் அரங்கேற்றப்படுகிறது என்பதுதான் மிகவும் கொடுமையான விஷயம்.

இப்படி எத்தனையோ முரண்பாடான வாழ்க்கையை பட்டியலிட்டால் இந்தக்  கட்டுரையின்  நீளம் அதிகமாகிவிடும்.

அந்தக் கற்பனையான முயல் ஆமைக் கதை இந்தப் பட்டியலில் சேருமா.?  அடுத்த முறை நண்பரை பார்க்கும் பொழுது இதைப் பற்றி கேட்கவேண்டும்.
 


 



0 comments:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...